Connect with us

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா? ஒரே மருந்தில் புற்று நோய் தீரும் அதிசயம்

Latest News

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா? ஒரே மருந்தில் புற்று நோய் தீரும் அதிசயம்

புற்று நோய் என்பது யாருக்கு வருகிறது எவருக்கு வருகிறது என்று தெரியாது, வந்துவிட்டால் அவற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் பலருண்டு, இருந்தாலும் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் புற்று நோயில் இருந்து மீண்டு வர முடிகிறது அந்த அளவு பொருளாதார வசதி இருப்பதால் அதிகபட்ச உயர்தர சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிகிறது.

நடிகை சோனாலி பிந்த்ரே, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போன்றவர்கள் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், இருப்பினும் இவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் ஆவர்.

வசதியில்லாதோர் அனைவரும் புற்றுநோய் வந்து விட்டால் மிகுந்த சிரமப்பட்டு செலவு செய்து பல தெரபிகள் செய்தே மீண்டு வருகின்றனர்.குறைந்த அளவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் உயிர்த்தெழுகின்றனர்.

இப்போது அமெரிக்காவில் மேன்ஹட்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட  டஸ்டார்லி மேப் என்ற மலக்குடல் சம்பந்தப்பட்ட சோதனையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது.

18 பேருக்கு சோதனை மருந்து வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் புற்றுநோயில் இருந்து குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது மருத்துவ உலகில்  பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

பாருங்க:  மோகன்லால் நடிக்கும் மரைக்காயர் படத்தின் தமிழ் டிரெய்லர்

More in Latest News

To Top