Entertainment
கனடா பிரதமர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை
கடந்த சில நாட்களாக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் கடுமையாக போர் எழுந்துள்ளது. உக்ரைனில் போரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உறவினர்கள் உறவுகள், உடைமைகளை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உக்ரைனுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயல்பட்டு வருவதால் அவரை ரஷ்யாவிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவர் மட்டுமல்லாது அவர் சார்ந்த அமைச்சர்களும் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது போல் ரஷ்யாவை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நபர்களை கனடாவும் தங்கள் நாட்டுக்குள் நுழைய கூடாது என தடை விதித்துள்ளது.