போலீஸ் திட்டியதால் ஓட்டுனர் தற்கொலை – கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

901

போக்குவரத்து போலீஸ் அசிங்கமாக திட்டியதில் ஓட்டுனர் ராஜேஷ் மனமுடைந்து தற்கொலை செய்ததை அடுத்து வருகிற 5ம் தேதி தமிழகம் முழுவதும் கார் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

சென்னையில் என்.டி.எல் நிறுவனத்தில் கால் டாக்சி ஓட்டுனராக பணிபுரியும் ராஜேஷ், போக்குவரத்து போலீஸ் 2 பேர் திட்டியதில் மனமுடைந்து கடந்த 25ம் தேதி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு போலீசார் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை கண்ணீர் மல்க செல்போன் வீடியோவில் பேசி பதிவு செய்தார். மேலும், தன் தற்கொலைக்கு சென்னை போலீசே காரணம் எனவும் கூறியிருந்தார்.

அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும், இந்த விவகாரம் கார் ஒட்டுனர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, சென்னை போக்குவரத்துதுறை காவலர்களை கண்டித்து, வருகிற 5ம் தேதி தமிழகம் முழுவதும் கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

பாருங்க:  கணிக்க முடியாத குணம் கொண்டவர் ராகுல்- ஓபாமா