கட்டபொம்மன் ஜாக்சன் துரை காலமானார்

23

பி.ஆர் பந்துலு அவர்கள் இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு காட்சி இராமநாதபுரம் அரண்மனையில் நடப்பதாக காண்பிக்கப்படும். அதில் வீரபாண்டிய கட்டபொம்மனான நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் வரி வசூலிப்பவராக ஜாக்சன் துரை வேடத்தில் நடிகர் சி.ஆர் பார்த்திபன் என்பவரும் நடித்திருந்தனர்.

பின்னாளில் வந்த நடிகர் பார்த்திபனை தெரிந்து கொண்ட அளவுக்கு இந்த நடிகர் பார்த்திபனை பலருக்கும் தெரியாது. ஜாக்சன் துரையாகவே பலரும் அறிந்து வைத்திருந்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் அந்த வசனம் புகழ்பெற்றது. இன்றைய இளைய தலைமுறையும் அந்த வசனங்களை மனனம் செய்து வைத்திருந்தது.

இந்த புகழ்பெற்ற காட்சியில் ஜாக்சன் துரையாக நடித்த நடிகர்  சி.ஆர்பார்த்திபன் வயது மூப்பின் காரணமாக 90 வயதில் காலமானார். இவர் இந்த படம் தவிர்த்து பிரபு நடித்த கோழி கூவுது படத்திலும் நடித்துள்ளார்.

பாருங்க:  ஏப்ரல் 28 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்