Entertainment
பிஸி ஷெட்யூலில் நடிக்கும் ராதிகா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய கதாநாயகியாக வலம் வந்தவர் ராதிகா. இவரின் வெள்ளந்தியான நடிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்.
ஊர்க்காவலன், பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களில் இவரின் இட்லி காமெடி, காய்கறி வாங்கும் காமெடி போன்றவற்றை ராதிகாவின் நடிப்புக்கு உதாரணமாக சொல்லலாம்.
கடந்த சில நாட்களாக ராதிகாவின் புகைப்படம் தான் சமூக வலைதள சினிமா பக்கங்களில் பார்க்க முடிகிறது. வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு கெளதம் மேனனுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது போல் படத்தையும் இன்னொரு பக்கம் அரிவாள் ஷூட்டிங்கில் அருண் விஜய்யுடன் காரைக்குடி பக்கம் நடித்து கொண்டிருப்பதையும் பாண்டிராஜின் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் மறுபக்கம் நடித்து வருகிறார். அந்த ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் அதிகம் வெளியாகிறது.
இதன் மூலம் ராதிகா பிஸி செட்யூலில் நடித்து வருகிறார் என்பதை அறிய முடிகிறது.
