சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட இத்தனை மாவட்டங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
இவர்கள் சென்னையில் இருந்து ஏறியவுடனோ அல்லது தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஏறிய உடனோ திடீரென இரவு நேரத்தில் ஒரு ஹோட்டலில் கொண்டு போய் நிறுத்துவார்கள்.
அது விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி என்ற இடமாகும்.
மோட்டல்கள் எனப்படும் இரவு ஹோட்டல்களான இவற்றில் சுத்தம் தரம் எப்போதும் இருப்பதில்லை.
இதை கவனத்தில் கொண்டு விக்கிரவாண்டியில் குறிப்பிட்ட ஹோட்டல்களில் பஸ்களை நிறுத்த கூடாது என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி அருகே அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, மற்றும் அரிஸ்டோ ஹோட்டல்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு நின்று சென்றால் முறைப்படி அரசுக்கு தெரியப்படுத்தலாம்.