சென்னை மற்றும் 8மாவட்டங்களை நிவர் புயல் எனும் கொடூர புயல் மிரட்டியது. இதனால் வட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.புயல் வேகம் அதிகமானால் என்ன செய்வது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு புயல் கரையை கடந்து இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதால் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட அனைத்து மாவட்டங்களில் இன்று வழக்கம்போல் பேருந்து போக்குவரத்து தொடங்கியதாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
"நிவர்" புயலால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் சேவை, புயல் கரையை கடந்து விட்டதால் இன்று நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் இயக்கப்படும். #Nivar pic.twitter.com/CenzRaKryd
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 26, 2020
https://twitter.com/CMOTamilNadu/status/1331838593522810880?s=20