டிக்கெட் எடுக்காமல் பேருந்து நடத்துனரிடம் காவல் அதிகாரி செய்த வாக்குவாதத்தில் நடத்துனர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து கடலூரை நோக்கி அரசு பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது திட்டக்குடியில் காவல் அதிகாரியாக பணியாற்றும் பழனிவேல் என்பவர் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துவர் கோபிநாத் டிக்கெட் எடுக்கும் படி கூற, நான் போலீஸ்.. டிக்கெட் எடுக்க மாட்டேன் என வாக்குவாதம் செய்துள்ளார்.
நீங்கள் சீருடையில் இல்லை எனவே அடையாள அட்டையை காட்டுங்கள் என கோபிநாத் கூற, அதற்கு பழனிவேல் மறுப்பு தெரிவிக்க தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தூரம் இந்த வாக்குவாதம் நீண்டுள்ளது. அப்போது, கோபிநாத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.