Entertainment
பி.எஸ்.என் எல்க்கு மாறுவோம்- ட்ரெண்ட் ஆகும் டுவிட்
பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆரம்ப காலம் முதலே அனைத்து சேவைகளையும் முதலில் கொண்டு வந்தது. தற்போது அதை விட ஏர்டெல், வோடஃபோன், போன்ற நிறுவனங்கள் முன்னேறி 4ஜி, 5ஜி என முன்னேறி விட்டன. ஆனால் பி.எஸ்.என் எல் இன்னும் சில இடங்களில் மட்டும்தான் 4 ஜி உள்ளது ப்ராட் ஃபேண்ட் சேவையும் உள்ளது. ஆனாலும் ஜியோ, ஏர்டெல், வோடஃபோனுக்கு இருக்கும் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்க்கு குறைவுதான்.
இப்போது ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் திடீரென அதிரடியாக தங்களது மாதாந்திர டாரிஃப் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் அனைவரும் பி.எஸ்.என்.எல்க்கு மாறுவோம் என்ற கோஷம் கேட்க துவங்கியுள்ளது.
பி.எஸ்.என்.எல்க்கு மாறுவோம் என இணையவாசிகள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்ய துவங்கியுள்ளனர்.
