BSNL நிறுவனம் மூடப்பட போகிறதா

BSNL நிறுவனம் மூடப்பட போகிறதா?

BSNL நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
தொலைதொடர்பு துறையான BSNL நிறுவனம், கடந்த 2017 – 2018 ஆண்டில், பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, இந்த ஒரு வருடத்தில் ரூ. 31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ வந்தபின், ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
BSNL நிறுவனமும், இழப்பை சந்தித்துள்ளது, அதில் பிப்ரவரி மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், அதை மார்ச் மாதம் கொடுத்துள்ளது.

இந்நிலையில், நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க தொலைதொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன், சமீபத்தில் BSNL உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.அதில், நிறுவனத்தின் பங்கு முதலீட்டை குறைக்கலாமா அல்லது நிறுவனத்தை மூடிவிடலாமா என உள்ளிட்ட 10 ஆலோசனைகளை ஆலோசித்து வந்தனர்.

அதன்படி, அனைவரின் ஆலோசனையின் படி, BSNL நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்தது.அத்துடன், பணி ஓய்வு வயதை 60ல் இருந்து 58 ஆக குறைத்துள்ளது.
இருப்பினும், BSNL நிறுவனத்தை மூடும் எண்ணமில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.