சில சமயங்களில் நாட்டையே ஆள்பவர்கள் கூட அதிசயக்கதக்க வகையில் ஏதாவது வேடிக்கையாக சொல்வதுண்டு. சில வருடங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட, எனக்கு ஒரு ரூபாய்தான் சம்பளம் என சொல்லி அது சில வருடங்கள் வைரல் ஆனது.
அது போல பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தான் வாங்கும் சம்பளம் போதவில்லையாம். ஆரம்பத்தில் பத்திரிக்கையில் வேலை பார்த்து வந்த போரிஸ் ஜான்சன் ஆண்டுக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் யூரோ சம்பளம் வாங்கியுள்ளார்.
பிரதமர் பதவிக்காக அவர் வாங்கும் அரசு சம்பளம் 1லட்சத்து 50 ஆயிரமாம். 6 குழந்தைகள் இருப்பதால் இந்த சம்பளம் அவருக்கு போதவில்லையாம் அதனால் அவர் பழைய வேலைக்கே திரும்ப முயற்சி செய்கிறாராம்.