Entertainment
பிரட் ஆம்லெட், கட்லெட் போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள பயன்படும் மயோனிஸ் செய்வது எப்படி
கடைகளில் பிரட் ஆம்லெட், கட்லெட் இன்னும் ப்ரட் பயன்படுத்தி செய்யப்படும் அதிகமான உணவுகளுக்கு மயோனிஸ் எனும் தொட்டுக்கொள்ளும் ஒன்றை நமக்கு வைப்பார்கள் அந்த மயோனிஸை செய்வது எப்படி என பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்
1.முட்டை
4ஸ்பூன் சால்ட்
4 ஸ்பூன் மிளகுத்தூள்
எலுமிச்சை பாதி
சிறிதளவு சீனி
1முட்டைக்கு 100 மில்லி கடலை எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு முட்டையை மிக்ஸி ஜாரில் உடைத்து ஊற்றிக்கொள்ள வேண்டும் பிறகு மேலே சொன்ன பொருட்களை இதனுடன் சேர்த்து அடித்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சிறிது சிறிதாக எண்ணெய் விட்டு நான்கு முறை திரும்ப திரும்ப மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ள வேண்டும். இப்போது க்ரீம் போல மயோனிஸ் உங்களுக்கு கிடைத்து விடும். இதை வீட்டில் செய்யப்படும் பொருட்களுக்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்தி கொள்ளலாம்.