viral video

போலிஸ் முன்பு சிறுவன் போட்ட குத்தாட்டம் – வைரல் வீடியோ

தமிழக காவல்துறை அதிகாரி ஒருவன் முன்பு சிறுவன் ஒருவர் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

காவல்துறை உங்கள் நண்பன் என காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தாலும், போலீஸ் என்றாலே எல்லோர் மனதிலும் பயம்தான் முதலில் வருகிறது. சில போலீசாரின் நடவடிக்கையும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், சிலர் போலீசாரிடம் பயப்படாமல் மோதுவதும் உண்டு. இதுபோன்ற வீடியோக்கள் தற்போது இணையத்தில் வலம் வருது உண்டு.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ வேறு வகையை சேர்ந்தது. அதாவது, இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி முன்பு கொஞ்சம் கூட பயமில்லாமல் ஒரு சிறுவன் குத்தாட்டம் போடும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.