புரட்டாசி மாதம் வரும் செப்டம்பர் 17 ஆங்கில தேதி மஹாளய பட்ச அமாவாசையன்று பிறக்கிறது. புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே இறைச்சிக்கடைகளுக்கு வேலையில்லை பல ஊர்களில் மக்கள் இறைச்சி சாப்பிடமாட்டார்கள்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதமாக கடைபிடிக்கப்பட்டு அனைவரும் நாராயணனை நினைத்து விரதமிருப்பர். அதிலும் சென்னை ஒட்டிய வட மாவட்டங்களில் திருப்பதி வெங்கடேச பெருமானை நினைத்து கடும் விரதங்கள், இருப்பர் சிலர் சைவ உணவு மட்டுமே உண்ணுவர் இறைச்சி உண்ணுவதை ஒரு மாதத்திற்காவது கைவிட்டு இருப்பர்.
இந்த விரதம் கடைபிடிக்கும் நோக்கம் என்னவென்றால்,
புரட்டாசி மாதம் என்பது பொன் உருக வெயிலும் அடிக்குமாம் மண் உருக மழையும் வருமாம் என்ற பேச்சு உள்ளது இப்படியொரு பருவச்சூழ்நிலையில்தான் கால்நடைகளுக்கு வியாதிகள் வருமாம்.
கால்நடைகளுக்கு கொழும்பு நோய் போன்ற நோய்கள் வர சாத்திய கூறுகள் இக்கால கட்டத்தில் அதிகம்.
மனிதனுடைய உடலும் இரண்டு தட்பவெப்பநிலைக்கு மாறி மாறி இருக்கையில் நமது உடல் உறுப்புகளும் சற்று சோர்வான நிலையில் தான் இருக்கும்.
அந்த சூழ்நிலையில் நாம் நோயுற்ற அல்லது நோய் தாக்கும் அபாயத்தில் உள்ள கால்நடைகளை உணவுகளாக உண்டால் நமக்கும் நோய் தாக்கும் அபாயம் உண்டு.
இந்த நேரத்தில் இதை சொன்னால் யாரும் கேட்பது இல்லை. தேவையில்லாமல் விதண்டாவாதம் பேசுவார்கள். நோயுற்ற உயிர்களை கொல்லக்கூடாது என்பதை யாரும் கேட்பது இல்லை. இதனால் காக்கும் கடவுளான விஷ்ணுவின் வழிபாட்டு முறையை ஏற்படுத்தி இந்த விரத முறையை கடைபிடிக்க வைத்திருக்கிறார்கள்.
ஏன் எத்தனையோ கடவுள் இருக்க ? திருமால் அதாவது விஷ்ணுவை வழிபட காரணம் யாது
இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் நமது உடல் சோர்வடைய சமயங்களில் இதற்கு தகுந்த மருந்து ” துளசி ” தான். துளசி தீர்த்தம் தான் சரியான மருந்து ஆகும். இது தான் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.
இதற்கு தான் வெங்கடேஷ்வரனை இந்த மாதத்தில் துதிக்க வேண்டும் அவருக்கு பிரதானமான பிரசாதமாக விளங்கும் துளசியை நாம் அருந்த வேண்டும் என்பது நமது மூதாதையர்களின் அரிய கண்டுபிடிப்பு.