9மாதங்களுக்கு பின் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் திறப்பு

9மாதங்களுக்கு பின் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் திறப்பு

ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் லாக் டவுன் செய்யப்பட்டபோது புகழ்பெற்ற திருப்பதி கோவில் கூட 6 மாதங்கள் அடைக்கப்பட்டது. அனைத்து கோயில்களும் அடைக்கப்பட்ட நிலையில் மக்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் திருப்பதி உட்பட நாட்டின் பெருங்கோவில்கள், சிறு கோவில்கள் என அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டது.

ஆனால் ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் மட்டும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் 9மாதங்களுக்கு பின் வரும் 23ம்தேதி கோவில் திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்த பிறகே வெளியூரில் உள்ளவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.