தற்போதைய நாகரீக உலகில் ஆபாச படம் பார்ப்பது பெரும்பாலோனோருக்கு கை வந்த கலையாகி விட்டது. இண்டர்நெட்டில் ஆபாச படங்கள் அதிகம் கிடைக்கிறது. அதை கையடக்க ஸ்மார்ட் போன்களில் வைத்து பார்க்கும் மக்கள் அதிகமாகவே உள்ளனர்.
ஆபாசம் குறைந்துள்ள இந்தியாவிலேயே இப்படி என்றால், மேற்கத்திய நாடுகளில் ஆபாச படங்களுக்கு கேட்கவா வேண்டும். கணக்கிலடங்கா வகையில் வெளிநாடுகளில் ஆபாச படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
இணையத்தில் கிடைக்கின்றன. இதனிடையே ஆபாச படம் பார்ப்பவர்களுக்காக அவர்களையும் ஆபாச படங்களையும் ஆய்வு செய்யும் வகையில் ஒரு புதிய படிப்பு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெட் மினிஸ்டர் கல்லூரியில் போனாகிராபி படங்களை ஆய்வு செய்வதற்காகவே இந்த படிப்பு துவங்கப்பட்டுள்ளது.