cinema news
அஜீத்தை பாராட்டியுள்ள ப்ளூ சட்டை மாறன்
அஜீத்தின் விவேகம் படத்தை கழுவி ஊற்றி விமர்சனம் செய்ததால் அஜீத் ரசிகர்களின் வாழ்நாள் எதிரியானவர் ப்ளூ சட்டை மாறன்.
அதன் பின் வந்த வலிமை திரைப்படத்தையும் மிக மட்டமான முறையில் விமர்சனம் செய்து அஜீத் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.
இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் அஜீத்தை ஒரு விசயத்துக்காக பாராட்டி இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் நடிப்பதை பெருமளவு அல்லது முற்றிலும் தவிர்த்துள்ள முன்னணி ஹீரோ: அஜித்குமார் என அவர் நேற்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.