cinema news
ப்ளூ சட்டை மாறனே பாராட்டிய சார்பட்டா
தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறனை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரின் திரை விமர்சனம் நிகழ்ச்சி எல்லோருக்கும் தெரியும். ஒரு படம் சரியில்லை என்றால் கழுவி கழுவி ஊற்றி காக்காய்க்கு போட்டு விடுவார். நறுக்கு தெறித்தாற் போல் விமர்சனம் செய்வார்.
இவரே முதல் முறையாக ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரைக்கு எந்தவித நெகட்டிவ் விமர்சனம் இல்லாமல் நேர்மையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆரம்பம் முதல் கடைசி வரை சார்பட்டா பரம்பரை நன்றாக இருப்பது வேறு விசயம். ஆரம்பம் முதல் இறுதி வரை இவரது விமர்சனமும் நாகரீகமாக பாஸிட்டிவாக இருந்தது ஆச்சரியத்தின் உச்சம்.