Entertainment
ப்ளூ சட்டை மாறன் படத்தின் பாடல்கள் எப்போது
ப்ளூ சட்டை மாறன் என்ற பெயரில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றில் திரை விமர்சனம் செய்து ரணகளம் செய்து வருபவர் மாறன்.
இவரது அதிரடி திரை விமர்சனத்தால் பல படங்கள் சரிவை சந்தித்ததால் பல தயாரிப்பாளர்கள் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
விவேகம் உள்ளிட்ட அஜீத் படத்தை மிக மோசமான முறையில் விமர்சனம் செய்ததால் அஜீத் ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்டார்.
இப்படி பல எதிர்ப்புகளை சந்தித்து வந்த இவரும் முதல் முறையாக ஆன் டி இன் டியன் என்ற பெயரில் படம் இயக்குகின்றார்.
இவர் இயக்கும் படம் என்பதால் பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்படுகின்றனவாம்.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 23, 2021
