போதைப்பொருள் கடத்த உதவியதாக தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் நடித்த நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டார். இவர் கன்னடத்தில் அதிகமான படங்களில் நடித்தவர்.
இதுபோல் போதைப்பொருள் கடத்த உதவியதாக நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டார். இவர்களோடு சேர்த்து மொத்தம் 29 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நடிகை ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றனராம்.
அதிலும் நடிகை ராகிணி திவேதிக்கு போதைப்பொருள் அதிக அளவு உட்கொண்டுள்ளாரா என சோதனை செய்ய ரத்தம் , சிறுநீர் கேட்டனராம் இதில் சிறுநீரில் கொஞ்சம் தண்ணீரையும் மிக்ஸ் செய்து கொடுத்து விட்டதை சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.இதன் மூலம் உடலின் வெப்ப நிலையை குறைக்க முயற்சித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே காவல்துறை அதிகாரிகளிடம் இவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இவர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.