இப்படி ஒரு பாராட்டா? இதுக்கு மேல என்ன வேணும் – நெகிழ்ந்த பார்த்திபன்

210

கண்பார்வை அற்றவர்களின் பாராட்டை ஒத்த செருப்பு பெற்றதால் அப்படத்தின் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 20ம் தேதி வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால், வித்தியாசமான படங்களை விரும்பும் ரசிகர்கள் பலரும் இப்படத்தை ரசித்து பார்த்து பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த ஒரு ரசிகர் ‘இப்படத்தை 2 முறை பார்த்துவிட்டேன். இன்னும் அதன் பாதிப்பிலிருந்து அவர் மீளவில்லை. தியேட்டரில் கண்பார்வையில்லாத 4 பேர் இப்படத்தை பார்த்தனர் (கேட்டனர்). அவர்களுக்கு பார்த்திபனை தெரியாது. ஆனால், படம் முடிந்தவுடன் அவர்கள் நால்வரும் எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டினர் என குறிப்பிட்டிருந்தார். இதை பகிர்ந்த ஒரு நெட்டிசன் ‘இதுக்கு மேல என்ன வேணும். இந்த படத்தை சொல்ல’ என குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பார்த்திபன் ‘இருந்தும் இல்லாமல் நடிப்பவர்கள் நடுவே, இல்லாமலும் இருப்பதாய் உணர்ந்து, எழுந்து பாரட்டிய உள்ளங்களுக்குக் கோடி நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  ஆர்.கே.சுரேஷை மீண்டும் இயக்கும் பாலா - அதிரடி அறிவிப்பு