Connect with us

Latest News

கைகால் வலி, மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் கருப்பு உளுந்து கஞ்சி

Published

on

பொதுவாக வெள்ளை உளுந்தை விட கருப்பு உளுந்து சிறந்தது. இந்த கருப்பு உளுந்தை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை ஆனால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கருப்பு உளுந்தில்தான் இருக்கிறது.

உடல் எப்போதும் பலவீனமானதாக இருப்பதாக பலர் உணர்வார்கள் , மேலும், கால் வலி, கை வலி, என பலரும் அவதிப்பட்டு வருவார்கள் இது மேல் கால் வலிகளாலும் அவதிப்பட்டு வருவார்கள்.

மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சோர்வுகளில் இருந்து சீரான மாதவிடாய் பிரச்சினைகளையும் கருப்பு உளுந்தில் செய்யப்படும் களி சரி செய்து தரும்.

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படக்கூடிய நடு முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை இந்த கருப்பு உளுந்து கஞ்சி குடித்தால் பஞ்சாய் பறந்து போய்விடும். இத்தகைய சக்தி வாய்ந்த உளுந்து கஞ்சியை எந்த முறையில் செய்தால் சீக்கிரம் பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

சத்து கஞ்சி செய்வதற்கு முதலில் தோல் நீக்காத உளுந்து 100 கிராம் அளவு எடுத்து கொள்ளுங்கள். இதனை மூன்று முறை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு நல்ல தண்ணீரில் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளலாம். உளுந்து ஊறிய பிறகு அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் போட்டு கட்டி முளைகட்ட அனுமதிக்கவும். ஒரு சில்வர் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து விட்டால் ஆறே மணி நேரத்தில் உளுந்து முளைக்க ஆரம்பிக்கும். முளைக்கட்டிய இந்த உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த உளுந்தை அதில் சேர்க்கவும்.

பாருங்க:  மே 1 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

நாம் எவ்வளவு உளுந்து சேர்த்திருக்கின்றோமோ அதற்கு ஐந்து மடங்கு அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுப்பு தீயை மிதமாக வைத்து கைவிடாமல் கிளறி கொண்டே இருங்கள். இதற்கு இடையில் மற்றொரு பாத்திரத்தில் 150 கிராம் வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும். இதில் 50 எம்.எல் அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும். நமக்கு பாகு பதம் எதுவும் தேவையில்லை. வெல்லம் கரைந்தாலே போதும். வெல்லம் கரைந்த பிறகு அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைத்து விடலாம். உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். இதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களாவது எடுக்கும்.

உளுந்தின் பச்சை வாசனை போன பிறகு காய்த்து வைத்துள்ள வெல்லத்தை ஊற்றவும். வெல்லத்தின் பச்சை வாசனை போகும் வரை ஐந்து நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விடவும். ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பு, திராட்சை, பாதாம் பருப்பு மற்றும் ஒரு கையளவு தேங்காய் துருவலை சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும். கடைசியில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்தால் உளுந்து கஞ்சி தயாராக உள்ளது. இதனை பகல் நேரத்தில் தான் பருக வேண்டும். ஏனெனில் இது ஜீரணமாவதற்கு சிறிது நேரம் எடுக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த கஞ்சியை குடித்து வந்தாலே போதும், இரும்பு போல ஸ்ட்ராங் ஆகி விடலாம். இது பெண்களுக்கு மிகவும் சத்தான ஒரு பானம்.

உடல் சோர்வாக இருக்கும் பெண்கள் வயது வந்த பெண்கள் அனைவரும் கருப்பு உளுந்து கஞ்சியை முயன்று பார்க்கவும்.

பாருங்க:  சூரரை போற்று பாட்டை கேட்டால் வெறிவருது சார்- நகைக்கடை வியாபாரி

Entertainment2 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News2 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment2 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment2 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment2 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News2 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment2 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment2 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News2 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா

Latest News2 months ago

புதுமணத்தம்பதியாக திருப்பதியில் நயன் – விக்கி சாமி தரிசனம்