Latest News
தெளிவாக காய் நகர்த்தும் தமிழக பாஜக-முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பு
இலங்கையில் முள்ளிவாய்க்காலில் போரின்போது கொல்லப்பட்டவர்கள் நினைவாக நினைவேந்தல் விழா எப்போதும் நடைபெறும் .இதில் இலங்கை தமிழர்கள் அரசியல் குறித்து பேசுவதற்கென்றே சில அரசியல் கட்சி தலைவர்கள் இருப்பார்கள் குறிப்பாக வை.கோ. திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி போன்றோரை சொல்லலாம்.
இன்னும் பல சினிமா இயக்குனர்களையும் சொல்லலாம். இவர்களின் முரண்பட்ட குழப்பமான அரசியலால் ஈழ தமிழர் குறித்து பேசினாலும் பெரும்பான்மையான மக்கள் இவர்களின் பேச்சை கண்டுகொள்வதில்லை.
பாஜக போன்ற கட்சிகள் ஈழத்தமிழர் மீது அக்கறையாக காட்டிக்கொண்டாலும் அவர்கள் குறித்து பேசியதில்லை. ஏனென்றால் பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் இதை வைத்தே அரசியல் செய்வதால் அது போன்றதொரு முத்திரை நம் மீதும் வரக்கூடாது என்பதற்காக ஈழத்தமிழர் குறித்து பாஜக போன்ற கட்சிகள் பேசுவதில்லை.
இந்நிலையில் முதல்முறையாக ஈழத்தமிழர் அரசியலின் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். இதில் மூத்த தலைவர் பழ. நெடுமாறன் அவர்களும் பங்கேற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மோடிக்கு ஆதரவாகவும் பேசியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் செயல்பாடுகள் மூலம் அடுத்து ஆட்சிக்கு வருவதற்கான சிறந்த செயல்பாடுகளை நாடுகிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
