Latest News
லாவண்யாவுக்கு ஆதரவாக பாஜக இன்று மிகப்பெரும் உண்ணாவிரதம்
சமீபத்தில் தஞ்சாவூரில் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். அவர் தன்னை பள்ளி நிர்வாகிகள் கொடுமைப்படுத்தினர் மதம் மாற வற்புறுத்தினர் என சொன்னதாகவும் அதனால் தான் தற்கொலை செய்கிறேன் என சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஜேபி மற்றும் ஹிந்துத்வா அமைப்புகள் இந்த தற்கொலையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால் அரசு, மற்றும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட யாரும், லாவண்யாவை மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தவில்லை என தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் லாவண்யாவுக்கு ஆதரவாக இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது.
மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
