கேள்வி கேட்ட பியூஷ் மனுஷை சரமாரியாக தாக்கிய பாஜகவினர் – அதிர்ச்சி வீடியோ

184

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷை பாஜகவினர் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ். குறிப்பாக இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றி அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். சமீபத்தில் காஷ்மீரில் 370 சிறப்பு பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக அவர் பேசி வந்தார்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்ற பியூஷ் மனுஷ் காஷ்மிர் விவகாரம் குறித்து சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளிக்க முடியாமல் ஆத்திரமடைந்த அவர்கள் பியூஷ் மனுஷை தாக்க தொடங்கினர். அதன்பின் போலீசார் அங்கு சென்று பியூஷ் மனுஷை மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Video Courtesy – Sun News

பாருங்க:  திரையரங்கம் திறக்காதது குறித்து சீனு ராமசாமி கடும் வேதனை