தனியாருக்கு செல்லும் ரயில்வே துறை – பாஜக அரசு அதிரடி முடிவு

184

இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான விமானத்துறை, ரயில்வே துறை ஆகியவை தனியார் மயமக்கப்படவுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியே வந்து கொண்டிருந்தது. தற்போது அது உண்மையாகியுள்ளது.

முதல் திட்டமாக ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதில் முதலாவதாக தமிழகத்தில் சென்னை – பெங்களூரு, சென்னை – கோவை, சென்னை – மதுரை போன்ற வழிதடங்களில் தனியார் ரயில் சேவையை கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதோடு, சென்னை புறநகர் மின்சார ரயில் பாதைகளிலும் தனியார் சேவையைக் கொண்டு வரும் எண்ணமும் மத்திய அரசுக்கு இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.

இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  ஏப்ரல் 28 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்