Connect with us

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய பாஜக வேட்பாளர்கள் – விவரம் உள்ளே!

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய பாஜக வேட்பாளர்கள் - விவரம்

Tamil Flash News

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய பாஜக வேட்பாளர்கள் – விவரம் உள்ளே!

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக சார்பில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடந்தது. இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், தற்போதுள்ள நிலவரப்படி பாஜக் 343 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 93 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதர கட்சிகள் 106 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

ஆட்சியில் அமர 272 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில் 343 தொகுதியில் பாஜக முன்னணியில் இருப்பதன் மூலம் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் இந்த தேர்தல் படுதோல்வியை அடைந்துள்ளது. ஆனால், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் மண்ணை கவ்வியுள்ளனர். கன்னியாகுமாரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் என 5 பேரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இவர்களின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

பாருங்க:  கோட்சே விவகாரம் - கமலுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்

More in Tamil Flash News

To Top