திமுக வின் முன்னணி தலைவர்களில் ஒருவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா திடீரென பாஜகவில் சேர்ந்துள்ளது எல்லோருக்குமே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிவாவின் மகன் எப்படி பாஜகவில் இணைந்தார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் , இந்த விசயம் தொடர்பாக திமுக எம்.பி ஒருவரின் அதிரடி டுவிட்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்கு பெயர் போனவர் திமுக எம்.பி செந்தில்குமார். இவரது பல பதிவுகள் சர்ச்சையான பதிவுகளாகவே இருந்துள்ளன. தருமபுரியை சேர்ந்தவர் இவர்.
இவர் திருச்சி சிவா மகன் பாரதிய ஜனதாவில் இணைந்தது குறித்து கூறியது என்னவென்றால், உங்கள் கட்சியில் இரண்டு எம்.எல் ஏக்கள் தொடர்பில் உள்ளார்கள்.
எங்கள் தலைமை இசைந்தால் இரண்டு பேரையும் தூக்கிடுவோம் என அதிரடியாக கூறியுள்ளார்.