Food and Kitchen tips
பிஸ்கட் மில்க் ஷேக் செய்வது எப்படி
மில்க் பிக்கீஸ் அல்லது டைகர் போன்ற மில்க் பிஸ்கட்டுகளை எடுத்துக்கொள்ளவும் அல்லது சாக்லேட் பிஸ்கெட்டுகளான ஓரியோ, போர்பன் போன்ற பிஸ்கட்டுகளை இதற்கு எடுத்துக்கொள்ளவும். உங்கள் தேவைக்கேற்ப பிஸ்கட்டுகளை உடைத்து பவுடராக்கி கொள்ளவும்.
பாலை சீனி சேர்த்து நன்றாக காய்ச்சி அதை ப்ரிட்ஜில் செய்முறைக்கு முன்பே வைத்து விடவும். நன்றாக பால் கூலிங் ஆக இருக்க வேண்டும்.
இப்போது பாலை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றவும் அதில் இந்த பிஸ்கட் தூளை சேர்க்கவும் . அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் மீடியமாக பிஸ்கட் தூள் சேர்க்கவும். நன்றாக பாலை கலக்கி டம்ளரின் மேலே உங்கள் தேவைக்கு ஏற்றது போல் வெண்ணிலா அல்லது சாக்லேட் ஐஸ்க்ரீம் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது மில்க் ஷேக் ரெடி.
