பிஸ்கோத் படத்தின் புதிய பாடல் வெளியீடு

பிஸ்கோத் படத்தின் புதிய பாடல் வெளியீடு

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மூவிஸ் மற்றும் எம்.ஆர்.கே.பி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் பிஸ்கோத்.ஆர். கண்ணன் டைரக்டு செய்துள்ள இந்த படத்தை இவர் தயாரிக்கவும் செய்துள்ளார்.

படத்தில் வரும் தனி காமெடியை மறந்து காமெடி ஹீரோ சப்ஜெக்டில் மட்டுமே பல வருடங்களாக நடித்து வரும் சந்தானம் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தின் புதிய பாடல் நாளை வெளியிடப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளிவந்து விட்டது இதில் சந்தானத்துக்கு இரண்டு கதாநாயகிகள் ஜோடியாக நடிக்கின்றனர்.

பேபி சாங் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பாடல் ரவுடி பேபி பாடல் ஹிட் ஆனது போல் பெரிய அளவில் ஹிட் ஆகுதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். முழுக்க முழுக்க காமெடி கலந்து தயாராகியுள்ள இந்த படம் கொரோனா அப்டேட்டாக கொரோனா காலத்து காமெடிகளை ஆங்காங்கே தெளித்து விட்டுள்ளது.