தீபாவளிக்கு அந்த படம் வருது இந்த படம் வருது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மாஸ்டர் படம் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தீபாவளியன்று ட்ரெய்லர் மட்டும்தான் தீபாவளியன்று வெளிவருகிறதாம்.
இந்நிலையில் சந்தானம் நடிப்பில் நகைச்சுவை படமாக பிஸ்கோத் நாளை முதல் ரிலீஸாகிறது. தீபாவளி ரிலீஸில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை சூரரை போற்று படமும் அமேசானில் ரிலீஸ் ஆகி விட்ட நிலையில் சந்தானத்தின் நகைச்சுவை படமாவது வந்ததே என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.