பிஸ்கட் கம்பெனி வைத்துள்ள நரேன் தன் மகன் சந்தானத்தை தனக்கு பிறகு தன் கம்பெனிக்கு முதலாளியாக்க நினைத்து திடீரென இறந்து விடுகிறார். இதனால் கம்பெனி நரேனின் நண்பரான ஆனந்தராஜ் கைக்கு சென்று விடுகிறது.
சந்தானம் கம்பெனியின் வேலையாள் போல் நடத்தப்படுகிறார். இதற்கிடையே ஆதரவற்றோர் இல்லத்தின் மீது சந்தானம் கவனம் செல்கிறது. அங்குள்ள செளகார் ஜானகி சந்தானத்துக்கு அறிமுகமாகிறார்.
அவர் சொல்லும் கதைகள் சந்தானத்துக்கு அப்படியே நடக்கிறது அவரின் கதைகளால் சந்தானத்தின் வாழ்வு ஒளிமயமானதா என்பது மீதிக்கதை.
படத்தின் பல காட்சிகள் லொள்ளு சபாவை ஞாபகப்படுத்துவது போலவே உள்ளது குறிப்பிடத்தக்க கொஞ்சம் நகைச்சுவை இருந்தாலும் திரைக்கதை பலவீனமாக இருப்பது போல தோன்றுகிறது.
ஆடம் சாண்ட்லரின் பெட்டைம் ஸ்டோரீஸ் என்ற படத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு பிஸ்கோத் என்ற கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.
ஒருமுறை பார்க்கலாம் ரகம்.