சென்னை அண்ணாநகரில் பிரபலமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று முன் தினம் இரவு ஒரு மது பார்ட்டி நடந்துள்ளது.
இந்த பார்ட்டியில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர். பிரேசிலை சேர்ந்த ஒரு பாடகரின் இசை நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இதில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் 1500 ரூபாய் ஒரு நபருக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜோதி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த பிரவீன் என்பவர் கலந்து கொண்டுள்ளார், இவர் தனது நண்பர்களான நீக்கல், ஐஸ்வர் ஆகியோரையும் சேர்த்துக்கொண்டு ஆட்டம் போட்டுள்ளார் மென் பொறியாளரான இவர், இசை-பாடலுக்கு தகுந்தவாறு ஆட்டம் போட்டதில்.
திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் இறந்து விட்டார். காவல்துறையும் காவல்துறை உயரதிகாரிகளும் அந்த இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர், அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மஞ்சுளா சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கிருந்த 844 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தார். மேலும், அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிகிறது.