தந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல இயக்குனர்

தந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல இயக்குனர்

தமிழில் ஜெயம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராஜா. இப்படத்தின் மூலம்தான் இவரது சகோதரர் ஜெயம் ரவியும் நடிகராக அறிமுகமானார் இந்த படத்தின் மூலம் துவங்கிய இவர்களது சினிமா பயணம் நல்லதொரு வெற்றியுடன் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது.

இவர்களது தந்தை எடிட்டர் மோகன், அந்தக்காலத்து படங்கள் பலவற்றில் பணியாற்றியுள்ளார், ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஹிட் நடிகர்கள் நடித்த பல படங்களில் இவர்தான் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

திரைத்துறையில் பல்லாண்டுகளாக பல்வேறு சாதனை புரிந்துள்ள எடிட்டர் மோகனின் பிறந்த நாளை அவரது மகன் ஜெயம் ராஜா கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.