சென்னையில் உள்ள குரோம்பேட்டையை சேர்ந்தவர் பார்த்தசாரதி வசந்தி தம்பதியினர், இவர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 1976ம் ஆண்டு வெளிநாடு சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா எல்லாம் முடிந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் மூலமாக சென்னை திரும்ப விமானத்தில் உட்கார்ந்தனர்.
விமானத்தை இயக்கியதுமே விமான இஞ்சினில் கோளாறு ஏற்பட்டு திடீரென விமானம் வெடித்து சிதறியது. இதில் 95 பயணிகள் இறந்த நிலையில் தம்பதிகள் இருவரும் இணைந்தனர்.
தற்போது அந்த தம்பதிகளின் மகளான மாலினி துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு தாய் தந்தையின் இறப்பு சான்றிதழ் தேவைப்படவே அதை கேட்டு தனது மாமனார் சமூக ஆர்வலர் சந்தானத்தின் உதவியுடன் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதினார். அதை முதல்வர் மும்பை மாநகராட்சிக்கு பரிந்துரைத்தார். இருப்பினும் மும்பை மாநகராட்சி சரியான ஆதாரங்கள் இல்லை என்று இறப்பு சான்றிதல் கொடுக்க மறுத்தது.
இதையடுத்து கே ஜார்ஜ் என்ற தன்னார்வலர் மூலம் மும்பை அந்தேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது தந்தையின் இறப்பு சான்றிதழை பெற்றுள்ளார் மாலினி.