அதிக விலை கொண்ட பிரியாணி

17

உலகிலேயே அதிக விலை கொண்ட பிரியாணியை ஒரு உணவகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கல்ல இது துபாயில், துபாயில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாம்பே போரோ என்ற பிரியாணி ரெஸ்டாரன்ட்டில் ராயல் பிரியாணி என்ற பெயரில் உலகிலேயே அதிக விலை கொண்ட இந்த பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரியாணியில் 23 கேரட் சாப்பிடக் கூடிய தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு பிளேட் விலை கிட்டத்தட்ட ரூ. 4 லட்சம் ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட 6 பேர் இந்த ஒரு பிளேட் பிரியாணியை உண்ண முடியும்.பாம்பே போரோ ரெஸ்டாரன்ட் துபாயில் தொடங்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இந்த ராயல் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்தால் இந்த பிரியாணி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

பாருங்க:  சாண்டி இல்லனா ஒன்னும் இல்ல - பிக்பாஸ் வீட்டில் உருகும் முகேன் (வீடியோ)