Entertainment
பிரியாணி பற்றிய தவறான வதந்தி- அப்படி இல்லை என்று விளக்கம் கொடுக்கும் ஊடகங்கள்
தமிழ்நாட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் இருக்கும் ஒரு கடை என்றால் அது பிரியாணி கடைதான். சாலையில் நடந்து செல்லும்போது தடுக்கி விழுந்தால் கூட அது பிரியாணி கடை வாசலில்தான் விழுக வேண்டும் என்பது போல சூழ்நிலை இருக்கிறது.
இப்படிப்பட்ட பிரியாணியை தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு மண்டலம் பாதிப்பாகிறது, ஆண்மை குறைகிறது என யாரோ சிலர் கிளப்பி விட்ட வதந்தியால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
சமூக வலைதளங்களிலும் அவை எதிரொலித்ததால் பல டாக்டர்களும், பிரியாணி கடைக்காரர்களும் அப்படி எல்லாம் இல்லை என போட்டி போட்டுக்கொண்டு பிரியாணிக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
யார் வேண்டுமானாலும் பிரியாணி சாப்பிடலாம் அதனால் நரம்பு,ஆண்மை ரீதியான பிரச்சினைகள் இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
