வானில் பறக்கும் பறவைகள் கீழே விழுந்து மடியும் அவலம்- அமெரிக்க மக்கள் அதிர்ச்சி

12

உலகத்தில் பல்வேறு ரூபங்களில் ஏதாவது ஒரு அழிவு வந்து கொண்டே இருக்கிறது. இயற்கை சீற்றங்கள், சுனாமி, நில நடுக்கம், காட்டுத்தீ, கோவிட் 19 என மனிதர்களின் வாழ்க்கையை புரட்டி போடுவது மட்டுமல்லாமல் பல்வேறு பறவைகள், விலங்குகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் இயற்கை சீற்றங்கள் பாதிக்கிறது.

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நிறைய உயிரினங்கள் செத்து மடிந்தது. பல உயிரினங்கள் தீயில் கருகி கிடந்தது பார்க்கவே மிக அவலமாக இருந்தது.

இந்நிலையில்

அமெரிக்காவின் பல்வேறு நகரத்தில் வானில் பறந்து கொண்டிருக்கும் பல பறவைகள் ஆயிரக்கணக்கில் இறந்து இறந்து விழுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது பறவை விலங்கின ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது , அமெரிக்காவின்கொலராடோ, டெக்ஸாஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் பறந்து கொண்டிருந்த குருவி இனங்களான தவிட்டுக் குருவிகள், ராபின், சிட்டு குருவிகள் உள்ளிட்ட பறவைகள் வானிலிருந்து விழுந்து இறந்து வருகின்றன. இறந்து போன பறவைகளின் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியவில்லை
இதன் இறப்புக்கான சரியான காரணமும் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் எரியும் காட்டுத்தீயின் விளைவாக புகை மண்டலம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அனுமானமாக நம்பப்படுகிறது.

பாருங்க:  71 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம்