விஜய் குரலில் ‘வெறித்தனம்’ பாடல் புரமோ வீடியோ – ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் குரலில் ‘வெறித்தனம்’ பாடல் புரமோ வீடியோ – ரசிகர்கள் கொண்டாட்டம்

Bigil verithanam song promo video – பிகில் திரைப்படத்தில் விஜய் சொந்தகுரலில் பாடியுள்ள வெறித்தனம் பாடலின் புரமோ வீடியொ வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படம் தொடர்பான செய்திகளை இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக அவர் வெளியிட்டு வருகிறார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ‘வெறித்தனம்’ பாடல் நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலை விஜய் பாடியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்பாடல் பதிவின்போது எடுக்கப்பட்ட வீடியோவை புரமோ வீடியோவாக அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.