பிக்பாஸ் வெற்றி போட்டியாளர் இடத்தை தங்களுக்கு விட்டுக்கொடுக்கும் படி கவின் சேரனிடம் கவின் கோரிக்கை வைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் 16 பேர் இருந்த நிலையில் தற்போது அந்த வீட்டில் 8 பேர் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் எலுமினேஷன் கிடையாது என கமல்ஹாசன் கூறிவிட்டார். ஆனால், அடுத்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சேரனிடம் ‘நீங்கள் பல வெற்றிகளை பார்த்து விட்டீர்கள். நாங்கள் வயதில் சிறியவர்கள். எங்களுக்கு விட்டுக் கொடுங்கள்’ என கவின் கோரிக்கை வைக்கும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு வனிதா எதிர்ப்பு தெரிவித்த காட்சிகளும் அதில் உள்ளது.
#Day71 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/3wir23lIhW
— Vijay Television (@vijaytelevision) September 2, 2019