ரசிகர் கேட்ட கேள்வி.. கண்ணீர் விட்டு அழுத லாஸ்லியா (வீடியோ)

ரசிகர் கேட்ட கேள்வி.. கண்ணீர் விட்டு அழுத லாஸ்லியா (வீடியோ)

Biggboss today promo video – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவிடம் ரசிகர் எழுப்பிய கேள்வி அவரை அழ வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது சேரன் தனது அப்பா போலவே இருப்பதாக கூறிய லாஸ்லியா அவரை அப்பா என்றே அழைத்து வந்தார். சேரனும் அவரை மகள் போலவே பாவித்து வந்தார். ஆனால், சேரனின் பாசம் நாடகம் என கவின் கூறியதை நம்பி லாஸ்லியா மனம் மாறினார்.

இந்நிலையில், இந்த இன்று ஒரு புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், லாஸ்லியாவிடம் கேள்வி கேட்கும் ரசிகர் ஒருவர் ‘சேரன் உங்களிடம் உண்மையான பாசத்தோடுதான் பழகுகிறார். ஆனால், நீங்கள் அப்படி இருக்கிறீர்களா?’ எனக் கேள்வி கேட்க, லாஸ்லியா ஒரு மாதிரி சமாளித்து, அழுது அவருக்கு பதிலளித்தார்.