பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான் – உறுதி செய்த விஜய் டிவி

224

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டில் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கோலிவுட்டுக்கும் தாவியது. பிக்பாஸ் தமிழ் முதல் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அது மாபெரும் வெற்றி அடையவே 2 மற்றும் 3வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கினார். தற்போது சீசன் 3 நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4ஐ யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் சரத்குமார், சூர்யா, மாதவன், சிம்பு என பலரின் பேரும் அடிபட்டது.

இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அடுத்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே, அடுத்த சீசனுக்கும் கமல்ஹாசனே தொகுப்பாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் - சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்த கமல் பேட்டி