மாறுவேடத்தில் கவின் – பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டாரா? ஆதாரம் இதோ!

173

Biggboss kavin quit from biggboss home – பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகர் கவின் வெளியேறிவிட்டதாக கடந்த 2 நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவனின் தாய் ராஜலட்சுமி மற்றும் நெருங்கிய உறவினர்கள் சீட்டுக் கம்பெனி நடத்தி பலரிடம் பண மோசடி செய்ததாக 2007ம் ஆண்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் அனைவரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நேற்று முன் தினம் நீதிமன்றம் திர்ப்பளித்தது. எனவே, பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் விரைவில் வெளியேறுவார் எனவும் வெளியேறிவிட்டார் எனவும் செய்திகள் கசிந்து வருகிறது.

இந்நிலையில், ஒரு தியேட்டரில் சாஹோ திரைப்படத்தின் ரசிகர்களின் கருத்தை கேட்க இரு யுடியூப் சேனலை சேர்ந்தவர்கள் காத்திருந்த போது, படம் பற்றி கருத்து தெரிவித்த நபர் ஒருவர் அப்படியே கவின் போலவே இருந்தார். அடையாளம் தெரியக்கூடாது என அவர் ஒட்டு தாடியுடன் வந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்த நெட்டிசன்கள் கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார் எனக் கூறி வருகின்றனர்.

பாருங்க:  2019 சூப்பர் மூன் நாள் மற்றும் தேதி தெரியுமா? supermoon of february 19, 2019 time