கவினின் முன்னாள் காதலி இவர்தானா? – வெளியான ஆதாரம்

கவினின் முன்னாள் காதலி இவர்தானா? – வெளியான ஆதாரம்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினின் முன்னாள் காதல் பற்றிய சில தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். அபிராமி, சாக்‌ஷி என தொடங்கி தற்போது லாஸ்லியாவுக்கு ரூட்டு போட்டு வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு லாஸ்லியாவிடம் தனது முன்னாள் காதல் பற்றி அவர் மனம் திறந்து பேசினார்.

இங்கு வருவதற்கு முன்பு எனக்கு ஒரு காதல் இருந்தது. ஆனால், இருவரும் பிரிந்துவிட்டோம். அந்த வலியோடுதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன் என லாஸ்லியாவிடன் கவின் கூறினார்.

இந்நிலையில், கவினின் முன்னாள் காதலி நடிகை பிரியா பவானி சங்கர் என செய்திகள் வெளிவந்துள்ளது, சிங்கப்பூரில் இருவரும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் இருவரும் சேட் செய்து கொண்ட ஸ்கிரீன் ஷாட் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.