பிக்பாஸ் வீட்டில் கோல்டன் டிக்கெட் யாருக்கு? – பரபரப்பு தகவல்

193

பிக்பாஸ் வீட்டில் இறுதி போட்டிக்கு நேரிடையாக செல்லும் கோல்டன் டிக்கெட் யாருக்கு செல்கிறது என்பது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம் நேரடியாக ஒரு போட்டியாளர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே அதை நோக்கி எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் முகேன் முதலிடத்தில் இருக்கிறார்.

mugen

பினாலேவின் இறுதி டாஸ்காக நேற்று சைக்கிள் ஓட்டும் போட்டி கொடுக்கப்பட்டது. இதில், முகேன் அதிக நேரம் ஓட்டி கோல்டன் டிக்கெட்டை பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார் என தகவல் கசிந்துள்ளது.

இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் நாமினேஷனில் சேரன், லாஸ்லியா, ஷெரின், கவின் ஆகியோர் உள்ளனர். இதில் ரசிகர்களிடம் குறைவான வாக்குகளை பெற்ற ஷெரின் வெளியேற்றப்பட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

பாருங்க:  ராமர் கோவில் கட்டுமானப்பணி தொடங்கும் தேதி