இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கல.. ஷெரினை ஏமாற்றிய பிக்பாஸ் (புரமோ வீடியோ)

190
sherin

நடிகை ஷெரினுக்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்று அவருக்கு பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இயக்குனர் சேரன் வெளியேறினார்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். எனவே, போட்டியாளர்களை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என மஹத் கேட்க, விளையாட்டாக சில டாஸ்குகளை பிக்பாஸ் கொடுத்து வருகிறார்.

அதில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் பற்றி ஷெரின் ஏதாவது எழுத வேண்டும். ஆனால், அது யாருக்கும் காட்டப்படாது என்கிற உத்தரவாதத்தின் பேரில் ஷெரின் எதையோ காதிகத்தில் எழுதுகிறார். அவர் எழுதி முடித்த பின் ஷெரின் யாருக்கு எழுதினாங்களோ அவருக்கு கொடுக்க வச்சிட்டு போங்க என மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரிம் பிக்பாஸ் கூற ஷெரின் அதிர்ச்சியடையும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  என்னால்தான் பிரச்சனை...தர்ஷன் வாழ்வில் இனிமேல் நான் இல்லை - கதறும் காதலி