இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யார் வருகிறார்கள் தெரியுமா? – கசிந்த செய்தி

248
biggboss

இந்த வார இறுதியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது 8 பேர் மட்டுமே இருந்த நிலையில், சேரன் வெளியேற்றப்பட்டார். ஆனால், ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கிருந்து உள்ளே யார் என்ன பேசுகிறார் என்பதை அவர் கேட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஃபிரீஸ் டாஸ்க்(Freeze task) கொடுக்கப்படவுள்ளது. அதாவது, போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினரை உள்ளே அனுப்புவார்கள். ஆனால், அவர்களை பார்த்தவுடன் பிக்பாஸ் ஃபிரீஸ் கூறி விடுவார். இந்த டாஸ்கை நாம் பிக்பாஸ் முதல் 2 சீசனிலுமே பார்த்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த வாரம் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  ரகசிய அறையிலிருந்து வெளியேறிய சேரன்.. அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. வீடியோ பாருங்க