இது ஜெயிலும் இல்ல… வனிதா வார்டனும் இல்ல.. கொதித்தெழுந்த ஷெரின்..

208

பிக்பாஸ் வீட்டில் நடிகை வனிதா விஜயகுமார் பற்றி ஷெரின் புகார் கூறும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வனிதா விஜயகுமார் வந்த பின் அவரால் பல பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது. கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் என ஒருவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக ஷெரினுக்கும், தர்ஷனுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், தர்ஷன் தோல்வி அடைந்தால் அதற்கு ஷெரினே காரணம் என என வனிதா புகார் கூற இது ஷெரினுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால், வனிதாவிடம் அவர் சண்டை போட்டார்.

இந்நிலையில், தற்போது ஒரு புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஷெரினுக்கு கொடுத்த வேலையை அவர் செய்யவில்லை என சேரனிடம் வனிதா புகார் கூற, அதன்பின் ஷெரின் அங்கு வருகிறார். அப்போது அவருக்கும், வனிதாவுக்கும் வாக்குவாதம் எழுகிறது. அதன்பின் சாக்‌ஷியிடம் பேசும் ஷெரின் ‘இது ஒன்னும் ஜெயிலும் இல்லை.. வனிதா வார்டனும் இல்லை’ எனக்கூறும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

பாருங்க:  மீண்டும் கதறி அழும் லாஸ்லியா ; காரணம் என்ன தெரியுமா? : வீடியோ பாருங்க