Connect with us

முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த விமானம் விபத்து

Latest News

முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த விமானம் விபத்து

விபத்தில் சிக்கி கீழே நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் ஒன்றரை மணிநேரமாக ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் சிக்கி விபத்தில் சிக்கியது.

நீலகிரி குன்னூர் அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. தற்போது வரை முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது தற்போது மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

பாருங்க:  புரவி புயல் முதல்வரின் எச்சரிக்கை

More in Latest News

To Top