தமிழ்நாட்டில் இன்று வலிமை படம் ரிலீஸ் ஆகியுள்ளது இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த பரவசத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். இன்று ரிலீஸ் ஆகியுள்ள வலிமை திரைப்படத்தை சிறு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் நிலை வேறு மாதிரி அங்கு பவன் கல்யாணின் ரசிகர்கள் நீண்ட நாளாக ஒரு படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர் அந்த திரைப்படம் பீம்லா நாயக் என்ற திரைப்படமாகும்.
இந்த படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். ஆந்திராவின் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். பவன் கல்யாணின் பீம்லா நாயக் நாளை ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் வெறித்தனமாக இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.